சிவகாசி தொழில் துறையினருக்கு உதவ ஒன்றிய அரசு தயாராக உள்ளது: ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேச்சு

சிவகாசி: சிவகாசி தொழில் துறையினருக்கு எந்த பிரச்சனை என்றாலும் அதற்கு தீர்வு காண ஒன்றிய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியில் ஸ்ரீ காளீஸ்வரி குடும்பத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உரை வெளியிடும் விழா நடைபெற்றது. ஸ்ரீ காளீஸ்வரி குழுமத்தின் நூற்றாண்டு நினைவு அஞ்சல் உரையை தென்மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜெய்சங்கர் வெளியிட மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பெற்றுக் கொண்டார்.

இதில் இந்திய அஞ்சல் துறை தமிழக தென்மண்டல தலைவர் ஜெய்சங்கர், ராமச்சந்திரராவ் விண்வெளி ஆய்வு மைய துணை இயக்குனர் வெங்கடேஸ்வரா சர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இவ்விழாவில் உரையாற்றிய ராம்தாஸ் அத்வாலே ”சிவகாசி பகுதியில் 1920களில் விவசாயத் தொழில் பிரதானமாக இருந்து வந்தது. சிவகாசியை சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் ஆகியோரால் சிவகாசியில் தீப்பெட்டி தொழில் தொடங்கப்பட்டது.

1923ம் ஆண்டு சண்முக நாடார் ஶ்ரீ காளீஸ்வரி தீப்பெட்டி நிறுவனத்தை தொடங்கினார். தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடும் ஶ்ரீ காளீஸ்வரி குழுமம் 40க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. தமிழகம் இந்தியாவில் முக்கியமான மாநிலம். சிவகாசி பட்டாசு இந்திய அளவில் பிரசித்தி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தொழில் துறையினருக்கு ஆதரவாக இருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சிவகாசி உள்ள தொழில்துறையினருக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்கு தீர்வு காண ஒன்றிய அரசு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

The post சிவகாசி தொழில் துறையினருக்கு உதவ ஒன்றிய அரசு தயாராக உள்ளது: ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: