நாகூர் திரவுபதியம்மன் கோயிலில் தீமித்திருவிழா

 

நாகப்பட்டினம்,ஏப்.26: நாகூர் திரவுபதியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீமித்து நேர்த்தி கடன் செலுத்தினர். பங்கு மாதத்தில் ஆண்டு தோறும் நாகூர் திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெறும். இதன்படி கடந்த 10ம் தேதி கொடியேற்றுத்துடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 14ம் தேதி அம்மன் பிறப்பு, 16ம் தேதி வில்வளைப்பு, திருக்கல்யாணம், 18ம் தேதி துகில் தருதல், 19ம் தேதி குறவஞ்சி நாடகம், ஸ்ரீகாளி நடனம் ஆகியவை நடந்தது.

தினதோறும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பத்தர்கள் அழகு காவடி சுமந்து வந்து தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து தீமிதித்த பத்தர்களுக்கு கோயில் பூசாரி சாட்டை அடி வழங்கினார்.

The post நாகூர் திரவுபதியம்மன் கோயிலில் தீமித்திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: