துறையூர் அருகே சூறைக்காற்றுடன் மழையால் 2 ஏக்கர் சோளப்பயிர்கள் சேதம்-காற்றில் பறந்த பட்டுவளர்ப்பு மைய மேற்கூரை

துறையூர் : துறையூர் அருகே கோட்டத்தூரில் சூறாவளி காற்றில் 6 லட்சம் மதிப்பிலான பட்டுப்பூச்சி வளர்ப்பு கட்டிட மேற் கூரை சேதமானது. இதேபோல் 2 ஏக்கரில் பயிரிடப்பட்ட சோளப்பயிர்கள் சேதமடைந்தது.திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. துறையூர் அருகே உள்ள கோட்டத்தூர் கிராமம் காந்திநகரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் அசோக்குமார் (47) என்ற விவசாயி தனது வீட்டின் அருகே பட்டுவளர்ச்சி துறையின் கீழ் மானியம் பெற்று ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டி பட்டுப்பூச்சி வளர்ப்பு மையம் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீசிய சூறாவளி காற்றில் கட்டிடம் மற்றும் மேற்கூரை முழுமையாக சேதம் அடைந்தது.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மீண்டும் பட்டுப்பூச்சி வளர்ப்பு மையம் அமைக்க தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோன்று அதே கிராமத்தை சேர்ந்த அபுசாலி என்பவர் தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம் பயிரிட்டு இருந்தார். நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் சோளப்பயிர் முழுமையாக சேதம் அடைந்தது. இதேபோல் மேலும் பல இடங்களில் சோளப்பயிர், எள் பயிர்கள் சேதம் அடைந்தன. சேதம் குறித்து வருவாய்துறையினர் பார்வையிட்டனர்.

The post துறையூர் அருகே சூறைக்காற்றுடன் மழையால் 2 ஏக்கர் சோளப்பயிர்கள் சேதம்-காற்றில் பறந்த பட்டுவளர்ப்பு மைய மேற்கூரை appeared first on Dinakaran.

Related Stories: