தனுஷ்கோடி சாலையில் முட்செடிகளுக்குள் இருந்த விஷ்ணு சிலை அகற்றம்

 

ராமேஸ்வரம், ஏப்.23: தனுஷ்கோடி சாலையில் முட்செடிகளுக்குள் வைக்கப்பட்டிருந்த விஷ்ணு சிலையை வருவாய் துறையினர் அகற்றினர். ராமேஸ்வரம்-தனுஷ்கோடி சாலையில் அமைந்துள்ள பாரயடி கடற்கரை பகுதி முட்செடிகளுக்குள் மணலில் மரத்தினாலான விஷ்ணு சிலையை யாரோ வைத்துச் சென்றுள்ளனர். இருகைகளிலும் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் நான்கு அடி உயரம், இரண்டு அடி அகலத்தில் முற்றிலும் மரத்தினால் செய்யப்பட்டு இருந்தது.

இச்சிலையை வெளியூர் நபர்கள் எவரோ இங்கு கொண்டு வந்து வைத்துச் சென்றுள்ளனர். பூஜைக்கு வைக்காத சிலைகள், சேதமடைந்த சுவாமி சிலைகள் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்டு ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடலில் போடுவது வழக்கமாக உள்ளது. இதுபோல் இந்த மரச்சிலையை வெளியூர் நபர்கள் இங்கு வைத்து சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ராமேஸ்வரம் வருவாய் துறையினர் இதனை அகற்றி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

The post தனுஷ்கோடி சாலையில் முட்செடிகளுக்குள் இருந்த விஷ்ணு சிலை அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: