மண்டபம், ஏப்.18: மண்டபம் ஒன்றிய திமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடந்தது. மண்டபம் பேரூராட்சி மகாலில் நடந்த கூட்டத்திற்கு நகர் செயலாளர் அப்துல் ரஹ்மான் மரைக்காயர் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பேசினார். புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை தொகுதி பார்வையாளர் வெங்கடாசலம் வழங்கினார்.
மாநில மீனவரணி துணை செயலாளர் ரவிச்சந்திர ராம வன்னி, மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, மாவட்ட பிரதிநிதி ராஜகோபால், சிறுபான்மையினர் உரிமை நல பிரிவு மாவட்ட துணை செயலாளர் முபாரக், அயலக அணி மாவட்ட துணை செயலாளர் காதர் ஜான், கவுன்சிலர்கள் சாதிக்பாட்ஷா, வாசிம் அக்ரம் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் உச்சிப்புளி, பட்டணம்காத்தான் ஆகிய இடங்களில் மண்டபம் மேற்கு மத்திய ஒன்றிய திமுக பூத் கமிட்டி கூட்டம் செயலாளர்கள் பிரவீன், முத்துக்குமார் தலைமையில் நடந்தது.
The post மண்டபம் ஒன்றியத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.
