வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் விடையாற்றி ஊஞ்சல் உற்சவம்

காளையார்கோவில், ஏப்.18: கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் விடையாற்றி வெள்ளி ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. காளையார்கோவில் அருகே கொல்லங்குடி அரியாகுறிச்சியில் அமைந்துள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவில் திருவிழா மார்ச் 30ம் தேதி தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கேடக விமானம், பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்கக் குதிரை, யானை போன்ற விமானத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 9ம் நாளான்று திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. 10ம் நாள் காலை தீர்த்தவாரி நடைபெற்றது. 11ம் நாள் விடையாற்றி வெள்ளி ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் உபயதாரர் வெங்கடேஸ்வரி (அருள்வாக்கு காரைக்குடி) என்பவரால் சிறப்பாக நடத்தப்பட்டது.

The post வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: