ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஒட்டன்சத்திரம், ஏப். 18: ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தேவத்தூர், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், சத்திரப்பட்டி, விருப்பாச்சி, வடகாடு, பால் கடை, பெத்தெல்புரம், கண்ணனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் தக்காளிகள் விற்பனைக்காக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து தக்காளியை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்வர். தற்போது தக்காளியின் விலை வரத்து அதிகரிப்பால் கடந்த சில நாட்களாக அதன் விலை தொடர்ந்து குறைந்த நிலையில் உள்ளது, கடந்த மாதம் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது வரத்து அதிகரிப்பால் தக்காளி பெட்டி ரூ.60 முதல் ரூ.80 வரையிலும், ஒரு கிலோ சில்லரை கடைகளில் ரூ.8க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சியால் தக்காளி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

The post ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: