இலுப்பூரில் தீ தொண்டு வாரவிழா

விராலிமலை,ஏப்.18: தமிழகம் முழுவதும் தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு வார விழா நடைபெற்று வருகிறது. தீ தொடர்பான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள், அரசு ஊழியர்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். இலுப்பூர் தீயணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் இலுப்பூர் அருகே உள்ள எண்ணெய் ஊராட்சியில் தீ தடுப்பு குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. இதில் தீ விபத்துக்கள், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

100 நாள் திட்டப்பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தீ தடுப்பு முறை குறித்து அறிந்து கொண்டனர். இதேபோல இலுப்பூர் தனியார் விவசாய கல்லூரியில் தீத்தடுப்பு குறித்து செயல் விளக்கம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி வளாகத்தில் திடீரென தீ பரவினால் தடுக்கும் முறைகள், மாடியில் இருந்து பாதிக்கப்பட்டோரை மீட்டு வருதல் ஆகியவை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் தீத்தடுப்பு சாதனங்களை பயன்படுத்தி தீயை அணைப்பது குறித்து விளக்கமளித்தனர். செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

The post இலுப்பூரில் தீ தொண்டு வாரவிழா appeared first on Dinakaran.

Related Stories: