பந்தலூரில் கோடை வெயிலால் அவதி குடையுடன் பசுந்தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள்

பந்தலூர் : பந்தலூர் பகுதியில் தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தங்ளை பாதுகாத்துக்கொள்வதற்கு தலையில் குடையுடன் பணியில் ஈடுபட்டுள்ளனர். பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் வழக்கத்தைவிட கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக தேயிலைத்தோட்டங்களில் பசுந்தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்கள் தலையில் குடையை கட்டிக்கொண்டு பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் கூறுகையில், மலை பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தேயிலை மகசூல் குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு தேயிலை தோட்டம் நிர்வாகம் நிர்ணயிக்கும் கிலோ பசுந்தேயிலையை பறிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக தலையில் குடைகளை கட்டிக்கொண்டு பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

The post பந்தலூரில் கோடை வெயிலால் அவதி குடையுடன் பசுந்தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: