சாயல்குடி, ஏப்.13: முதுகுளத்துர் பூசேரியில் மின்சாரம் தாக்கி பலியான வாலிபர் குடும்பத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பாக நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறப்பட்டது.
முதுகுளத்தூர் ஒன்றியம், பூசேரி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் லிங்கராஜ்(21). மண் அள்ளும் இயந்திரம் ஆப்ரேட்டரான இவர், திருவாடனை பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த போது உயர் அழுத்த மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கிய உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பாக லிங்கராஜ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்(கிழக்கு) பூபதிமணி, பஞ்சாயத்து தலைவர் வளர்மதி குமார், திமுக கிளை செயலாளர் முகம்மது இப்ராஹீம், நீர்பாசன தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.The post மின்சாரம் தாக்கி இறந்த வாலிபர் குடும்பத்திற்கு அமைச்சர் நிதியுதவி appeared first on Dinakaran.
