மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

திருவள்ளூர், ஏப். 13: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, வேலம்மாள் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் காலந்தோறும் பெண்” என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நிலையான வாழ்க்கை புவிக்காக என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் அறிஞர் சுல்தான் அகமது இஸ்மாயில் ஆகியோர் கருத்துரை வழங்கினர். பிறகு மாணவ, மாணவியகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

மாபெரும் தமிழ் கனவு குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு காணொளியை பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், சுற்றுச்சூழல் அறிஞர் சுல்தான் அகமது இஸ்மாயில் ஆகியோர் பார்வையிட்டனர். பிறகு மாணவ, மாணவியரிடையே நடைபெற்ற தமிழ்ப் பெருமிதம் துணுக்குகள் வாசித்து விளக்கம் அளிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெருமிதச் செல்வி மற்றும் பெருமிதச் செல்வன் என்ற பட்டம் சூட்டி பாராட்டுச் சான்றிதழையும் புத்தகங்களையும், கேள்வி, பதில் பகுதியில் சிறந்த கேள்விகளை கேட்ட மாணவ, மாணவியர்களுக்கு கேள்வியின் நாயகி மற்றும் கேள்வியின் நாயகன் என்ற பட்டம் சூட்டிப் பாராட்டுச் சான்றிதழையும் புத்தகங்களையும் பரிசாக வழங்கினார்.

The post மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: