திருமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

திருமங்கலம், ஏப்.12: திருமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கோட்டை, மறவன்குளம், கப்பலூர் ஆகிய கிராமங்களில் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் திறந்துவைத்தார். கோடைவெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக திமுகவினர் நீர்மோர் பந்தல்களை திறக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி திமுகவினர் ஆங்காங்கே நீர்மோர் பந்தல் திறந்து வருகின்றனர். மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் நேற்று மேலக்கோட்டை, மறவன்குளம், கப்பலூர் காலனி மற்றும் கப்பலூர் ஆகிய நான்கு இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் முன்னிலையில் தெற்குமாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, சர்பத், மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கபாண்டி, கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் தனுஸ்கோடி, துணை செயலாளர்கள் கௌதம், பாண்டி, ராஜேஸ்வரி சந்திரன், பொருளாளர் கோபிநாத், மாவட்ட பிரதிநிதிகள் ரஞ்சித்குமார், பாண்டி, விஜயராஜன், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன்அதியமான், முன்னாள் அவைத்தலைவர் கப்பலூர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: