சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் ஈஸ்டர் வாழ்த்து

சென்னை: ஈஸ்டர் திருநாளையொட்டி சென்னைப் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் பொதுமக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: உயிர்த்தெழுந்த ஆண்டவர் திமிறி எழுந்து திணற வைத்த ஆண்டவர், திமிறி எழுதல் என்பது கூட்டமாக சேர்ந்து அப்பாவி ஒருவரை அடித்து துவைத்து மூச்சு இழந்த நிலைக்கு அவரை தள்ளி இறுமாப்புடன் இருக்கும் நேரத்தில் மூர்ச்சையாகி கிடந்தவர் உள்ளாற்றல் பெற்று எழுந்து நிற்பதையே திமிறி எழுதல் என்கிறோம். அவ்வாறே ஆண்டவர் இயேசு எவரது உதவியுமின்றி உள்ளாற்றல் பெற்று உயிர்த்தெழுந்தார்.

இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பாலஸ்தீனத்தில் ஒரு காரியத்தை உண்மை என நிரூபிக்க இரண்டு சாட்சியம் தேவை. ஆனால் அவ்வாறு சாட்சியமாக பெண்கள், சிறுவர்கள், மனநிலை தவறியோர் மற்றும் மேய்ப்பர்கள் போன்றோர் தகுதியற்றவர். ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரபுகளை மாற்றி அமைப்பவர். உரிமை மறுக்கப்பட்டவர்களின் உரிமையை நிலை நாட்டுபவர். ஆம் இயேசு கிறிஸ்து தமது பிறப்பிற்கு மேய்ப்பர்களையும், தமது உயிர்த்தெழுதலுக்கு பெண்களையும் சாட்சியாக ஏற்படுத்திய ஒரு புரட்சிகரமான செயலாகும். இவ்வாறு முன்பு ஓடி ஒளிந்த இயேசுவின் சீடர்கள் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு உள்ளாற்றல் பெற்று உறுதியாக முன்வந்து தைரியத்தோடு இயேசுவை குறித்து சாட்சி பகிர்ந்தனர். உள்ளாற்றல் அருளும் உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாளின் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் ஈஸ்டர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: