கார் மீது லாரி மோதி விபத்து கிரண் ரிஜிஜூ உயிர் தப்பினார்

நகர்: காஷ்மீரில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கார் மீது லாரி மோதிய விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் சென்றிருந்தார். ஜம்முவில் இருந்து உதம்பூர் நோக்கி ஜம்மு – நகர் தேசிய நெடுஞ்சாலையில் அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ரம்பன் பகுதியில் அவரது கார் மீது லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது. இதில், கிரண் ரிஜிஜூ காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். முன்னதாக தனது காரில் இருந்தபடி அமைச்சர் கிரண் ரிஜிஜூ இயற்கை அழகை படம் பிடித்து டிவிட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், ‘பயணம் முழுவதும் அழகான சாலையை அனுபவிக்க முடியும்’ என அவர் டிவிட் செய்திருந்தார்.

The post கார் மீது லாரி மோதி விபத்து கிரண் ரிஜிஜூ உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: