காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பு நூதன போராட்டம்

திருவாரூர், ஏப். 7: வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கிட கோரி சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு துறைகளில் இருந்து வரும் காலி பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை நியமனம் செய்து வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்/ காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு திட்ட மைய பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்திட வேண்டும். சிறப்பு ஓய்வூதியமாக மாதம் ரூ 6 ஆயிரத்து 750 வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்ணில் கருப்பு துணியினை கட்டிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அமைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் ஆறுமுகம் மற்றும் பொறுப்பாளர்கள் நாகராஜன், சிவபெருமாள், பாண்டியன், குணசேகரன், டானியா, சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பு நூதன போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: