கூடலூர், கம்பம் பகுதி முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்: பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கூடலூர், ஏப். 6: தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, ‘‘இது அனைவருக்குமான திராவிட மாடல் அரசு’’ என்பதைத் தனது செயல்பாடுகள் மூலமாக நிரூபித்துக் காட்டி வருகிறார். மக்கள் திட்டங்களை மட்டும் நிறைவேற்றாமல் தமிழர்களின் பண்பாட்டையும், மொழியையும் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னதநோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் கோயில்களின் எண்ணிக்கை அதிகம். தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோயில்களை புனரமைக்க திமுக அரசு முடிவு செய்ததன் பேரில் சுமார் 400க்கும் மேற்பட்ட பழமையான கோயில்களில் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் குடமுழுக்கு நடத்தவும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. கோயில் புனரமைப்பு பணி மற்றும் குடமுழுக்கு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சுமார் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதிலும் திமுக அரசு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதுபோல் கோயில்களுக்கான நிலங்களும் அதிகம். இந்த நிலையில் கோயில் நிலங்களை தனி நபரோ அல்லது நிறுவனங்களோ ஆக்கிரமித்திருந்தனர். அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்களை மீட்க திமுக அரசு முடிவு செய்ததை அடுத்து களத்தில் இறஙகியது இந்து அறநிலையத் துறை. அதன்படி, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், மனைகள், குளங்கள் என பல சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மீட்கப்பட்ட நிலங்களை அதற்குரிய கோயில்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூடலூர் நகராட்சியின் 21 வது வார்டு பகுதியான லோயர்கேம்பை அடுத்து, குமுளி மலைச்சாலையில் உள்ளது வழிவிடும் முருகன் கோயில். இக்கோயிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

காலை முதலே ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகள் செய்தனர், கோயில் வனாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. கூடலூர் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி, பாதயாத்திரையாக வழிவிடு முருகன் கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். கூடலூர் கூடல் சுந்தரவேலவர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு காலையிலே கணபதி ஹோமத்துடன் தொடங்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆண், பெண் பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகளில் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

கம்பத்தில் உள்ள சுருளிவேலப்பர் என்ற சுப்பிரமணியசுவாமி கோயிலில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள், திரவியப் பொடி, பால், தயிர், இளநீர், பழங்கள், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. கம்பம் கௌமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகன் கோவில், கம்பராயப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள சண்முகநாதர் கோயில், ஆதிசக்தி விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post கூடலூர், கம்பம் பகுதி முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்: பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: