இளையோருக்கான இணையதள அடிமை மீட்பு மையம் துவங்கப்படும்: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி தகவல்

சென்னை: உலக மனநல நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைவரும் மனநலனை உறுதி செய்வோம் என்ற கோட்பாட்டுடன் மனநல நாள் அனுசரிப்பு மற்றும் மனநலம் பேணுதல் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்தை மருத்துவமனை டீன் ஜெயந்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற அரசு மனநல காப்பக இயக்குநர்  சத்தியநாதன், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ, கல்லூரி துணை முதல்வர் சுகுணாபாய், மனநல மருத்துவர் மலர் மோசஸ், ஒருங்கிணைப்பு அலுவலர் ரமேஷ்  ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவ மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த கவிதை, கட்டுரை மற்றும் குறும்படம்  தயாரிப்பு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டன. பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயந்தி பேசுகையில், ‘‘விரைவில் முதியோர் தினசரி பராமரிப்பு மையம் மற்றும் இளையோருக்கான இணையதள அடிமை மீட்பு மையம் தொடங்கப்படவுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவர்களுக்கு தொலைபேசி வாயிலாக 21,000 நோயாளிகளுக்கு மேல் மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு பிந்தைய மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது. இதற்கு மனநல மருத்துவ துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு டீன் ஜெயந்தி கூறினார்….

The post இளையோருக்கான இணையதள அடிமை மீட்பு மையம் துவங்கப்படும்: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: