கம்பத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு-24 மணி நேரத்தில் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா

கம்பம் : தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை பாசனம் மூலம் கம்பம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, தொட்டமன்துறை, அண்ணாபுரம், சின்னவாய்க்கால் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்த நெல், தற்போது அறுவடை செய்யப்படுகிறது. இதையடுத்து நெல் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, கம்பம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கலெக்டர் முரளிதரன், தேனி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதன்பேரில் கம்பம் ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில், தற்காலிக அரசு நேரடி நெல்முதல் நிலையம் நேற்று திறக்கபட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, நுகர்பொருள் வாணிப கழக, தேனி மாவட்ட துணை மண்டல மேலாளர் அவ்வைமணி தலைமை வகித்தார். உதவி மேலாளர் தரக்கட்டுப்பாடு முத்துசெல்வம், கண்காணிப்பாளர் சண்முகபிரியா முன்னிலை வகித்தனர். தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.இதில், நீரினை பயன்படுத்துவோர் சங்கச் செயலாளர் சுகுமாரன், துணைச்செயலாளர் ராமகிருஷ்ணன், ஐந்து மாவட்ட விவசாய சங்க முன்னாள் தலைவர் அப்பாஸ் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர். நெல் கொள்முதல் நிலையத்தில் 100 கிலோ எடை கொண்ட சாதாரண நெல் மூட்டைகளுக்கு 2 ஆயிரத்து 15 ரூபாயும், சன்னரக நெல் மூட்டைகளுக்கு 2 ஆயிரத்து 60 ரூபாய் வழங்குவதாகவும், 24 மணி நேரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ ஆய்வு கம்பத்தில் உள்ள ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியை கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ நேற்று ஆய்வு செய்தார். இதையடுத்து கம்பம்  மூகையதீன் ஆண்டவர்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் சுங்கம் பெண்கள் நடுநிலைப்பள்ளிக்கு சென்று, அங்கு ஆசிரியர்களை சந்தித்து, மாணவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். அப்போது அவருடன் கம்பம் நகராட்சி ஆணையாளர் சரவணன், எம்.இ.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட  தன்னார்வலர் கம்பம் சாதிக் ஆகியோர் உடனிருந்தனர்….

The post கம்பத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு-24 மணி நேரத்தில் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா appeared first on Dinakaran.

Related Stories: