×

அனுமதி இன்றி கனிம வளங்களை எடுத்த வழக்கு குவாரி உரிமையாளருக்கு ஒரு வருடம் சிறை

திருவில்லிபுத்தூர். மார்ச் 28: அனுமதியின்றி கனிம வளங்களை எடுத்த வழக்கில் கல்குவாரி உரிமையாளருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து, திருவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார்பட்டியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (46). இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். அரசு அனுமதி கொடுத்த இடத்தை தவிர மற்ற இடங்களில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்துள்ளதாக வந்த புகார் அடிப்படையில், திருவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குதிருவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், கனிம வளங்களை அனுமதியின்றி அதிகமாக எடுத்த குற்றத்திற்காக வாசுதேவனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும், ரூ.5000 அபதாரமும் விதித்து நேற்று உத்தரவிட்டார். மேலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ரூ.18 லட்சத்து 58 ஆயிரத்து 144 அபராதமாக விதித்து, அந்த தொகையை மாவட்ட கலெக்டரிடம் செலுத்த உத்தரவிட்டார்.

Tags : Quarry ,
× RELATED முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான...