திருவாரூர்: திமுகவின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூர் கட்சி அலுவலகத்தில் நேற்று மாவட்ட அவை தலைவர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ அசோகன்,மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட பொருளாளர்வெங்கடேசன், துணை செயலாளர்கள் கார்த்திக், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், எம். எல். ஏ.வுமான பூண்டி கலைவாணன் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். இதில்முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் கல்யாணம், ஆடலரசன் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து ஒன்றிய, நகர, பேரூர் கழகசெயலாளர்கள், பொதுக்குழு மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நுகர்பொருள் வாணிப கழகம் தகவல் திருவாரூர் மாவட்ட புத்தக திருவிழாவில் கலெக்டர் பேச்சு பெற்றோர் வலியுறுத்தல் திருவாரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
- நுகர்வோர் பொருட்கள் வர்த்தக சங்கம்
- திருவாரூர்
- மாவட்ட புத்தக திருவிழா பெற்றோர்கள் வலியுறுத்தல் திருவாரூர்
- மாவட்டம்
- திமுக தொழிலாளர்கள்