×

(வேலூர்) தேசிய பளுதூக்கும் போட்டியில் 4வது முறையாக சாதனை துணைவேந்தர் பாராட்டு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

திருவலம், மார்ச் 25: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் அகில இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் 4வது முறையாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தினை பெற்று சாதனை புரிந்துள்ளார். அவர்களை பல்கலைகழக துணைவேந்தர் பாராட்டி கவுரவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த சேர்க்காட்டில் உள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் 74 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் அகில இந்திய அளவிலான பல்கலைகழகங்களுக்கு இடையேயான பளுதூக்கும் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் 350 பல்கலைகழகங்களில் இருந்து 2 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 159 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது.

போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அப்துல்அக்கீம் கல்லூரி மாணவர்களில் மாணவன் டி.மாதவன் 73 கிலோ எடையளவு பளுதூக்கி தங்க பதக்கம் வென்றார். அதேபோல் மாணவர் பி.தனுஷ்குமார் 61 கிலோ எடையளவு பிரிவில் வெண்கலம் ெவன்றார். தொடர்ந்து வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் டி.மாதவன்-73 கிலோ, ருத்ரேஸ்வரன்-67 கிலோ, பி.தனுஷ்குமார்-61 கிலோ, மனோபாலா–73 கிலோ, லோக்கஸே்வரன் 73கிலோ எடையளவு பளுதூக்கி கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் 4வது ஆண்டாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதனையடுத்து பதக்கம் வென்ற மாணவர்களை திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.ஆறுமுகம் நேற்று மாலை பல்கலைகழகத்திற்கு அழைத்து பாராட்டி கவுரவித்தார். அப்போது பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.விஜயராகவன், டீன்தண்டபாணி, உதவி பதிவாளர் ரமேஷ், ஆட்சிமன்ற குழு உறுப்பினர் மாதவன், உடற்கல்வி இயக்குநர்கள் ராஜா, நடராஜ் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Vellore ,Thiruvalluvar University ,National Weightlifting Competition ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...