×

பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி தென்காசி மாவட்டத்துக்கு ஏப்.5ல் உள்ளூர் விடுமுறை

தென்காசி, மார்ச் 25: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி தென்காசி மாவட்டத்துக்கு ஏப்.5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பங்குனி உத்திர திருநாள் 5.04.2023 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத்தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 05.04.2023 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 06.05.2023 முதலாவது சனிக்கிழமை அன்று வேவை நாளாக அறிவிக்கப்படுகிறது. அச்சமயம் கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ, மாணவியருக்கு இவ்வேலைநாள் பெருந்தாது என்று தெரிவித்துள்ளார்.

Tags : Tenkasi district ,Panguni Uthra festival ,
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...