×

பங்குனி அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கும்பகோணம்: கும்பகோணம் டபீர் காவிரி படித்துறையில் நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாள் அமாவாசை திதியாகும். அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியை போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். அதிலும் பங்குனி மாதம் வரும் அமாவாசை அன்று விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்நிலையில் கும்பகோணத்தில் உள்ள டபீர் காவிரி படித்துறையில் பங்குனி அமாவாசை தினமான நேற்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க ஏராளமானவர்கள் புனித நீராடி, ஈர உடையுடன் ஆற்றின் கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் செய்து அரிசி, காய்கறி, கீரை உள்ளிட்ட பொருட்களை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து எள் தண்ணீரை காவிரியாற்றில் விட்டு சூரிய பகவானுக்கு தீபம் காட்டி வழிபட்டு தங்கள் கடமையை நிறைவேற்றினர். இதனையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

Tags : Darpanam ,Panguni Amavasai ,
× RELATED கரூர் மாவட்டத்தில் ஆடி 1 அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்