×

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு கத்தியுடன் வந்த வாலிபரால் பரபரப்பு

விழுப்புரம், மார்ச் 19:  விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு கத்தியுடன் வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், திடீரென்று வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி கூச்சலிட்டு கொண்டிருந்தார். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவரிடம் சென்று விசாரணை நடத்த முயன்றபோது அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தி, அவரது இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, முன் பக்க கவரில் கத்தி இருந்தது தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தொரவி கிராமத்தைச் சேர்ந்த சுமன்(38) என்பது தெரியவந்தது. மேலும் பிஎஸ்சி, பிஎட் பட்டதாரியான இவர் தமிழ்நாடு காவல்துறைபணியில் சேர விண்ணப்பித்து மதிப்பெண் குறைவால் வாய்ப்பை இழந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர் ஆட்சியரிடம் கொடுக்க வந்த மனுவில், என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் சரியாக படிக்க வைக்கவில்லை.

சரியாகவும் வளர்க்காததால் பல தவறுகளை செய்துவிட்டேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கத்தியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Villupuram ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...