×

பால் விலையை உயர்த்தக்கோரி மக்களுக்கு இலவசமாக பால் வழங்கி விவசாயிகள் போராட்டம்

ஓமலூர், மார்ச் 19: ஓமலூர் அருகே பால் விலையை உயர்த்தக்கோரி, 2வது நாளாக நேற்றும் ஆவினுக்கு பால் வழங்காமல், பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கி போராட்டத்தில ஈடுபட்டனர்.
ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர், பால் விலையை உயர்த்தக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், பால் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை துவக்கினர். இந்நிலையில் 2வது நாளான நேற்று ஆவினுக்கு பால் வழங்காமல் போராட்டம் நடத்தினர். ஓமலூர் அடுத்த பாகல்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பாக, ஆவினுக்கு பால் வழங்காமல் போராட்டம் நடத்திய விவசாயிகள், தாங்கள் கொண்டு வந்த பாலை, கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கினர். மேலும், பால் விலையை உயர்த்தும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கொடுக்க மாட்டோம் என்றும், பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக பாலை வழங்குவோம் என தெரிவித்தனர். இதையடுத்து பால்  உற்பத்தியார்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பால் விலையை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்