×

எண்ணும் எழுத்தும் பிரசார வாகனம்

கடலூர் மார்ச் 18: கடலூர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற பிரசார வாகனம் கடலூர் டவுன் ஹாலில் இருந்து புறப்பட்டது. கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா, உதவி திட்ட அலுவலர் சுந்தரேசன் முன்னிலை வகித்தனர். இந்த வாகனத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுடைய தனி திறன்களை அமைக்கப்பட்டிருந்த எண்ணும் எழுத்தும் மேடையில் வெளிப்படுத்தினர். எண்ணும் எழுத்தும் விளக்க துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பிரசார வாகனம் கடலூரில் இருந்து அண்ணா கிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் கம்மாபுரம், புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், பூங்காக்கள் ஆகிய இடங்களுக்கு சென்றது. இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை