×

ஈரோடு மாட்டு சந்தையில் ரூ.75,000க்கு ஜெர்சி பசு விற்பனை

ஈரோடு, மார்ச் 17: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் கலப்பின ஜெர்சி பசு ஒன்று ரூ. 75,000க்கு நேற்று விற்பனையானது.  ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ரூ.10,000 முதல் ரூ. 25,000 மதிப்பிலான 50 கன்றுகள், ரூ.25,000 முதல் ரூ.50,000 விலை மதிப்பில் 200 எருமை மாடுகள் ரூ.30,000 முதல் ரூ. 75,000 மதிப்பிலான 450 பசு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா போன்ற பிற மாநில வியாபாரிகள், விவசாயிகள் அதிகமாக மாடுகளை வாங்க வந்திருந்தனர்.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பாலும், பசுந்தீவனங்களின் விளைச்சல் குறைந்ததாலும் அதிக அளவிலான மாடுகள் விற்பனைக் கொண்டு வரப்பட்டிருந்தன. நேற்று விற்பனைக்கு வந்த மாடுகளில் 85 சதவீத மாடுகள் விற்பனையாகின. இதில், கலப்பின ஜெர்சி ரக பசு ஒன்று ரூ. 75,000 வரையிலான விலையில் விற்பனையானது. கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் வரும் நாட்களில் விற்பனைக்கு வரும் மாடுகளின் வரத்து மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர் .

Tags : Erode Cattle Market ,
× RELATED வியாபாரிகள் வருகை குறைவு எதிரொலி: ஈரோடு மாட்டு சந்தையில் விற்பனை மந்தம்