×

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 683 பேர் தேர்வு

சேலம், மார்ச் 15: முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, சேலம் மாவட்டத்திலிருந்து 683 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலதரப்பட்ட மக்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 50 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான ேபாட்டிகளில் கலந்துகொள்ள மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, இப்போட்டிகளில் பங்குகொள்ள 41,481 பேர் பதிவு செய்திருந்தனர்.

மாநில அளவில் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்து, சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்தது. தொடர்ந்து, கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கிய விளையாட்டுப் போட்டிகள், கடந்த 28ம் ேததி வரை நடத்தி முடிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவுக்கும் தடகளம், நீச்சல், கைப்பந்து, பழுதூக்குதல், கபடி, கிரிக்ெகட், கூடைப்பந்து,  கால்பந்து, ஹாக்கி, டேபிள் டென்னிஸ், சிலம்பம் உள்ளிட்ட 43 வகையான  போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், பள்ளிகளுக்கான பிரிவில் 7,775 மாணவர்கள், 3,045 மாணவிகள்,  கல்லூரி பிரிவில் 4,210 மாணவர்கள், 2,080 மாணவிகள், பொது பிரிவில் 550  ஆண்கள், 230 பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 125 ஆண்கள், 60 பெண்கள்,  அரசு ஊழியர்கள் பிரிவில் 338 ஆண்கள், 212 பெண்கள் என சேலம் மாவட்டத்தில்  நடத்தப்பட்ட முதலமைச்சர் கோப்பைகள் விளையாட்டுப் போட்டிகளில் 12,998  ஆண்கள், 5,627 பெண்கள் என மொத்தம் 18,625 நபர்கள் கலந்து கொண்டு திறனை வெளிப்படுத்தினர்.

இப்போட்டிகளில் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, 1,420 வீரர்கள், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக தலா ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 என வெற்றி பெற்றவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, இப்போட்டிகளில் முதலிடம் ெபற்ற 683 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர். இவர்களுக்காக தொடர் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு தமிழக அளவில் உச்சபட்சமாக, சேலம் மாவட்டத்தில் இருந்து முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்க 41 ஆயிரம் பேர் ஆர்வம் தெரிவித்திருந்தனர்.

இவர்களுக்காக காந்தி ஸ்டேடியம், கோட்டையில் உள்ள மாநகராட்சி கிளப், ஏ.என்.மங்கலம் பிஎன்ஆர் கிரிக்கெட் மைதானம், சோனா கல்லூரி, விநாயகா மிஷன் கல்லூரி, சிறுமலர் பள்ளி ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத்தொகை, நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ெதாடர்ந்து முதலிடம் பிடித்த 683 ேபர், விரைவில் தொடங்கவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, ஊக்கப்படுத்த மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் மேற்பார்வையில் தனித்தனி பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா