கடமலை மயிலை ஒன்றியத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் தென்னை, வாழை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி

வருசநாடு, மார்ச் 14: கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, குமணன்தொழு, மூலக்கடை, பொன்னன்படுகை, தங்கம்மாள்புரம், உப்புத்துறை, தும்மக்குண்டு, பின்னத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, தென்னை, வாழை, எலுமிச்சை, உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாய பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறை வேளாண்மைத்துறை அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளார்கள்.

இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறை நோய் தாக்குதல் சூறைக்காற்று போன்றவற்றால் தக்காளி ,வாழை தென்னை சாகுபடி அதிகம் பாதிக்கப்படுவது வழக்கம் குறிப்பாக பருவமழை காலம் தவிர மற்ற நேரங்களில் தக்காளி, தென்னை, வாழை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையால் மகசூலில் சிக்கல் ஏற்படுகிறது,

இதனால் கடமலை மயிலை ஒன்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று சாகுபடி பற்றியும் சொட்டுநீர் பாசனம் அமைப்பது குறித்து விளக்கிக் கூறி வருகிறார்கள். இதனால் கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள் என தெரிவித்தனர்.

Related Stories: