எவ்வித முன்னறிவிப்பின்றி கள்ளிக்குடியில் 3 மணி நேரம் நிறுத்தப்பட்ட இன்டர்சிட்டி ரயில் பயணிகள் பரிதவிப்பு மணி நேரம் வரை கள்ளிக்குடியில் நிறுத்தப்பட்டதால் இன்டர்சிட்டி ரயிலில் இருந்த பயணிகள் உரிய நேரத்தில் சேருமிடம் செல்ல இயலாம் ெபரும் அவதிக்குள்ளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமங்கலம்: எவ்வித முன்னறிவிப்புமின்றி மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு தினந்தோறும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து இந்த ரயில் மாலை 5.15 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்நிலையில் மதுரையில் இருந்து திருமங்கலம் வரையிலான இரண்டாவது அகல ரயில்பாதை பணிகள் நிறைவடைந்து இறுதிக்கப்பட்ட சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கிடையே திருப்பரங்குன்றம் - திருமங்கலம் இடையே புதிய இரண்டாவது அகலப்பாதையில் திடீர் ஆய்வு பணிகள் நேற்று மாலை நடைபெற்றது. இதன் காரணமாக திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ். ரயில் நேற்று மாலை 4.30 மணிக்கு கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதற்கான காரணம் புரியாமல் தவித்தனர். இந்நிலையில் இரண்டாவது அலகப்பாதையில் ஆய்வு பணிகள் நிறைவடைந்து இரவு 7.30 மணிக்கு பின் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கள்ளிக்குடியில் இருந்து புறப்பட்டுச்சென்றது. இதன்படி சுமார் 3

Related Stories: