×

வரும் ஆண்டுகளில் கடலூர் மாநகரம் சுற்றுலா வளர்ச்சியில் வளம் காணும்

கடலூர், மார்ச் 5:  கடலூர் மாவட்டத்தின் தலைநகர் என்ற நிலைபாட்டில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு திமுக ஆட்சியின் மைல்கள் சாதனையாக அமையப்பெற்றுள்ளது. மாநகராட்சியின் முதல் பெண் மேயராக சுந்தரி ராஜா அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்த பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடலூர் மாநகராட்சியில் 129 திட்டப்பணிகள் ரூ.83.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு செய்துள்ளது. ஓராண்டு சாதனை நூறாண்டு பேச வேண்டும் என்ற முதலமைச்சர் எண்ணங்களுக்கு ஏற்ப மாநகராட்சியில் அவரது சீரிய தலைமையிலான ஆட்சியில் திறம்பட திட்ட பணிகளை மேற்கொள்ள அனைத்து வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆலோசனையின்படி அனைத்து திட்ட செயல்பாடுகளும் கடலூர் மாநகரத்துக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் கடந்த ஓராண்டில் எண்ணற்ற பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தன்மை விரைவில் கடலூர் மாநகராட்சி தமிழ்நாட்டில் முதன்மையான மாநகராட்சியாக அமைவதற்கு அடித்தளமாக அமையும்.  முதலமைச்சரின் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தின் படி மாநகரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். மாநகர கவுன்சிலர்கள் அனைவரும் அவரவர்களது வார்டு பகுதிகளை மேம்படுத்திச் செல்ல மாநகராட்சியை எப்போது வேண்டுமானாலும் முறையிட்டு பணிகளை தடையில்லாமல் கொண்டு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட நிலைப்பாட்டில் தற்போது உள்ள மாநகர அலுவலகத்தில் இருந்து விரிவடைந்து மண்டல அலுவலகங்களும் விரைவில் செயல்பட உள்ளது. அதற்கேற்ற வகையில் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், புதுப்பாளையம் உள்ளிட்ட மண்டல பகுதிகளில் மாநகராட்சியின் செயல்பாடு மக்களை எளிதாக சென்றடையும் வகையில் அமைவதற்கு வழி காணப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் கடலூர் மாநகரம் நவீன தன்மையோடு பல்வேறு புதிய திட்டங்களோடு சுற்றுலா வளர்ச்சியில் வளம் காணவும், தொழில் வளத்தில் மேம்படவும், அடிப்படை வசதிகளில் சிறப்பு பெற்ற நிலையிலும் தலைசிறந்த மாநகரமாக அமைவதற்கு இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்.

Tags : Cuddalore ,
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...