அய்யலூரில் பேரூராட்சி கூட்டம்

அய்யலூர்: அய்யலூர் பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. மன்ற தலைவர் கருப்பன் தலைமை வகிக்க, துணை தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பாண்டீஸ்வரி வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அய்யலூர் பேரூராட்சிக்கு வருவாய் பலன் தரக்கூடிய பேரூராட்சிக்குட்பட்ட புளிய மரங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள இலவமரம், தென்னை மரம் போன்றவற்றை ரூ.43,750க்கு ஏலம் விடுதல், 10வது வார்டு நைனான் குளத்துப்பட்டி, 2வது வார்டு கருவார்பட்டியில் வடிகால் வசதியுடன் கூடிய தார் சாலை ரூ.57.15 லட்சம் செலவில் அமைத்தல், சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் உத்தரவு கடிதத்தின்படி 15வது நிதிக்குழு மானியத்தின் மூலம் 11வது வார்டு கஸ்பா அய்யலூரில் சிறு பாலத்துடன் கூடிய வடிகால் அமைத்தல், 2வது வார்டு கருவார்பட்டி, 1வது வார்டு சந்தைப்பேட்டை குறிஞ்சி நகரில் பைப்லைன் விஸ்தரிப்பு செய்தல், வரும் கோடைகாலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளை செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இளநிலை உதவியாளர் அல்லிமுத்து நன்றி கூறினார்.

ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கு பயன்படுத்தக்கூடாது. ஊசியை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் பதப்படுத்தி வாரம் ஒருமுறை நகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து ரத்த பரிமாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. ஒரே ஊசியை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் கைது மற்றும் அபராதம் போன்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென எச்சரிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக இன்று நகராட்சி சார்பில் நடைபெறும் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: