பெரியகுளம் நாமத்வாரில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை

பெரியகுளம், செப்.30: சுவாதி திருநட்சத்திரத்தை முன்னிட்டு பெரியகுளம் நாமத்வாரில் சிறப்பு பூஜை நடைபெற்றது. குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சுவாதி திருநட்சத்திரத்தை முன்னிட்டு திருபாதுகைக்கு திருமஞ்சனம், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் மங்கல திரவிய பொருள்களால் அபிஷேகம், விஷேச பூஜை, கிருஷ்ண அஷ்டோத்ரம், லட்சுமி அஷ்டோத்திர அர்ச்சனை பூஜை, குருஜி அஷ்டோத்திரம் அர்ச்சனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. எல்லோருக்கும் எல்லாவிதமான நன்மைகள் கிடைக்க வேண்டி மஹாமந்திர கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

Related Stories: