விதை மற்றும் அங்ககச்சான்று கருத்துக்காட்சி

கடலூர், செப். 28: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை சார்பாக கருத்துக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடப்பு சம்பா பருவத்துக்கு ஏற்ற ரகங்கள், பின்சம்பா பருவத்துக்கு ஏற்ற ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், உளுந்து, மணிலா ரகங்கள் ஆகியவை விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டன. விதைப்பண்ணை, அங்ககப்பண்ணை அமைத்து சான்று பெற்று விதை உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறப்பட்டது. பகுப்பாய்வின் போது விதை முளைப்புத்திறன் கணக்கீட்டு முறை மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் சம்பா பருவத்துக்கு ஏற்ற ரகங்களின் சிறப்பியல்புகளை ஒப்பீடு செய்து விவசாயிகளுக்கு விருப்பமான ரகங்களை தேர்வு செய்ய பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தார். வெள்ளத்தில் தாங்கி நிற்க க்கூடிய நெல் ரகங்களை பயிரிட விவசாயிகளுக்கு பரிந்துரை செய்ய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் (பொறுப்பு) அனுசுயா, விதை ஆய்வாளர்கள் தமிழ்வேல், செந்தில்குமார், விதை பகுப்பாய்வு அலுவலர்கள் ஷோபனா, மாலினி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: