மெடிக்கல் ஷாப்களை உடைத்து மாத்திரைகளை திருடி போதைக்கு பயன்படுத்திய ரவுடிகள் கைது

துரைப்பாக்கம்: போதை மாத்திரைகளுக்காக மருந்தகங்களை குறிவைத்து கொள்ளையடித்த  பேரை போலீசார் கைது செய்தனர். துரைப்பாக்கம்  குமரன் குடில் பகுதியில் தனசேகர் (30) என்பவர் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இந்த கடை பூட்டை உடைத்து  கல்லாப்பெட்டியில் இருந்த ₹40 ஆயிரம் மற்றும் குறிப்பிட்ட சில மாத்திரைகள் கொள்ளைபோனது. இதேபோல், 5 நாட்களுக்கு முன்பு பெருங்குடியில் உள்ள மணிகண்டன் என்பவரின் மெடிக்கல் ஷாப் பூட்டை உடைத்து குறிப்பிட்ட சில மாத்திரைகள் கொள்ளை போனது.

இதுகுறித்த புகாரின் பேரில், துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பழைய குற்றவாளிகளான பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சூர்யா (2), நெமிலிச்சேரியை சேர்ந்த மோகன் (19), கோட்டூர்புரத்தை சேர்ந்த அருண் (26), கண்ணகி நகரை சேர்ந்த சுஜன் (21) ஆகியோர் மேற்கண்ட கடைகளில் கொள்ளை சம்பவத்தில் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த  பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சூர்யா மீது திருவான்மியூர், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, சேலையூர் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதும், மோகன் மற்றும் சுஜன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் காவல் நிலையங்களில் பைக் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், இவர்கள்  பேரும் கடந்த சில மாதங்களாக போதை மாத்திரைக்காக மெடிக்கல் ஷாப்களை குறிவைத்து கொள்ளையடித்ததும், கொள்ளையடிக்கும் பணத்தை வைத்து கஞ்சா புகைப்பது, மது அருந்துவது, பெண்களிடம் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இவர்கள்  பேரையும் கைது செய்த போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: