உத்தமபாளையம் ஓட்டல்களில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்

உத்தமபாளையம், செப். 22: உத்தமபாளையம் ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. உத்தமபாளையம் ஓட்டல்களில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை நடப்பதாக உணவு தர பாதுகாப்புத்துறை அலுவலர் மதன்குமாருக்கு புகார் சென்றது. இதனடிப்படையில் நேற்று, திடீரென அவர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர். இதில் பைபாஸ், கிராமசாவடி உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையில், பிரிட்ஜில் வைக்கப்பட்ட கெட்டுப்போன கிரில் சிக்கன், சாப்பிட தரமில்லாத சிக்கன், நூடுல்ஸ், நூடுல்ஸ் ரைஸ் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. தொடர்ந்து ஓட்டல்களில் பொதுமக்களுக்கு பார்சல் கட்டுவதற்காக வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அழிக்கப்பட்டன. இதேபோல், தொடர்ந்து பாளையம் முழுவதும் சோதனைகள் தொடரும் என்றும், உணவகங்களில், கண்காணிப்பு தீவிரபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: