பொன்னமராவதி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

பொன்னமராவதி, செப். 13: பொன்னமராவதி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. தமிழகத்தில் பள்ளி செல்லும் வயதுடைய அனைத்துக்குழந்தைகளும் கட்டாயம் கல்வி கற்கவேண்டும் என்ற நோக்குடன் பள்ளி கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி ஒன்றியத்திலும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.

இதில் பொன்னமராவதி பகுதி வார்பட்டு நல்லூர் கிராமத்தில் கோகுல் என்கிற 7ம் வகுப்பு மாணவன் தொடர்ந்து பள்ளிக்கு செல்லாதது கண்டறியப்பட்டது. அம்மாணவனுக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர; மணிவண்ணன் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி அறிவுரை வழங்கினார். மேலும் மாணவன் மீண்டும் படிப்பதற்கு மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்க பாடப்புத்தகங்களையும் வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி, ஆசிரியர் பயிற்றுனர்கள் கல்யாணி, முகமது ஆசாத், மாலிகைகருப்பு உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: