வேதாரண்யம், ஆக. 27: வேதாரண்யம் ஒன்றியத்தில் ஆயக்காரன்புலம். நிர்வாக வசதிக்காக ஆயக்காரன புலம் முதல் சேத்தி, இரண்டாம் சேத்தி, மூன்றாம்சேத்தி, நான்காம் சேத்தி என 4 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 20 ஆயிரம் மக்கள்தொகை உள்ளது. இங்கு ஆண்கள், பெண்கள் என 2 மேல் நிலைப்பள்ளிகள், 2 உயர்நிலைப்பள்ளிகள், 4 நடுநிலைப்பள்ளிகள், 10 தொடக்கப் பள்ளிகள், ஒரு தனியார்மேல்நிலைப்பள்ளிகளில் 15 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள்.ஒரு கிளை நூலகம், ஒரு கால்நடை மருத்துவமனை, ஒரு கிளை அஞ்சலகம், ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், ஒரு மத்திய கூட்டுறவு வங்கி, ஒரு அரசுடைமை வங்கி, ஒரு வேளாண், தொடக்கநிலை சங்கம். புகழ்பெற்ற அய்யனார் கோயில் உள்ளது. தினமும் சுமார் 5 ஆயிரம் பேர் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆயக்காரன்புலம் கடைத்தெருவிற்கு வந்து செல்கின்றனர். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நிறைந்த பகுதியாகும் வேதாரண்யம் தாலுகாவின் வலுவான பெருளாதரத்தையும் பெற்ற இந்த நான்கு ஊராட்சிகளையும் இணைத்து பேரூராட்சியாக ஆயக்காரன்புலத்தை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை: விடுத்துள்ளனர்.