சேலத்தில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு

சேலம், ஆக. 11: சேலம் மாவட்டத்தில், நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 26 பேருக்கும், சேலம் சுகாதார மாவட்டத்தில் 13 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 11 பேருக்கும், நகராட்சியில் 2 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 1.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.27 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,762 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 360க்கும் மேற்பட்டவர்கள் வீடு, மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: