சுதந்திர தின அமுதபெருவிழா நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி

நீடாமங்கலம், ஆக.8: சுதந்திரதினவிழா அமுதபெருவிழாவை முன்னிட்டு நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் அ.வீ.வ. நினைவு புட்பம் கல்லூரி, பூண்டி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து சுதந்திரதின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நீடாமங்கலம் புகைவண்டி சந்திப்பில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் நீடாமங்கலம் புகைவண்டி நிலைய நிலைய கண்காணிப்பாளர் நரசிம்மலால் மீனா கூறுகையில், நடைமேடையில் இருந்த கலைகளை அறிவியல் நிலையமும், நாட்டுப்நல பணித்திட்ட மாணவர்களும் இணைந்து மண்வெட்டியால் நீக்கினர். இதனால் நடைமேடையில் அச்சமின்றி பயணிகள் நடமாட மிகவும் ஏதுமாக இருக்கும். இதனைத் தொடர்ந்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் புகைவண்டி நிலையத்தில் நாட்டு நலத்திட்ட மாணவர்கள் அழகு செடிகள் மற்றும் பாரம்பரிய மரங்களை நட்டனர். இந்த நிகழ்ச்சியில் அ.வீ.வ. நினைவு புட்பம் கல்லூரி, பூண்டி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பெரியதம்பி, நீடாமங்கலம் புகைவண்டி நிலையத்தை தொடர்ந்து, அடுத்தடுத்த புகைவண்டி நிலையங்களிலும் தூய்மைப்பணி தொடரும் எனக் கூறினார்.

Related Stories: