கலெக்டர் வினீத் தகவல் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் விவசாயிகள் மேம்பாட்டு திட்ட கூட்டம்

திருப்பூர், ஜூலை 28: மத்திய அரசு கூட்டுறவு அமைப்புகளை மேம்படுத்தி விவசாயிகளுக்கு நேரடியாக உதவிகளை வழங்கும் வகையில், புதிய திட்டத்தை தயாரித்துள்ளது. பிரதமரின் கூட்டுறவு உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தில், அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வருகிற 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, விவசாயத்தை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் வருகிற 5 ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட உள்ளது. தமிழகத்திற்கு மட்டும் நடப்பு ஆண்டில் (2022-2023) ரூ.750 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர்கள் மணி, முருகேசன் முன்னிலை வகித்தனர். இதில் சார்பதிவாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: