திருமங்கலம், ஜூன் 25: கள்ளிக்குடி அருகே கூடக்கோவிலிருந்து தூம்பக்குளம் செல்லும் ரோட்டில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி எஸ்ஐக்கள் சுரேஷ், முருகேசன் சோதனை செய்தனர். அதில் 45 கிலோ எடை கொண்ட 40 கிலோ மூட்டைகளில் 1800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விருதுநகரிலிருந்து ரேஷன் அரிசி கடத்தி கொண்டு மதுரைக்கு சென்றது தெரியவந்தது.
போலீசார் 1800 கிலோ ரேஷன் அரிசியையும், மினிவேனையும் பறிமுதல் செய்தனர். மினிவேனை ஓட்டி வந்த மதுரை ஐராவதநல்லூரினை சேர்ந்த ராம்கி (21), லோடுமேன்கள் மதுரை வினோத் (28) சிவகங்கை மாவட்டம் கொந்தகையை சேர்ந்த அஜித் (22) ஆகியோரை கூடக்கோவில் போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் கைப்பற்றி சென்றனர்.