சபலத்தில் மயங்கிய வாலிபரிடம் ரூ.5 ஆயிரம் டெபிட் கார்டு அபேஸ்: 4 பெண்களுக்கு வலை

அண்ணாநகர்: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (27), வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, சமையல் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து,  பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர்,  ஆசைவார்த்தை கூறி, சுரேஷை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார்.

சபலத்தில் மயங்கிய சுரேஷை, அந்த பெண் தாம்பரத்தில்  உள்ள  ஒரு வாடகை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஏற்கெனவே 3 இளம் பெண்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து, சுரேஷை தாக்கி, அவர் வைத்திருந்த ₹5 ஆயிரம் மற்றும் டெபிட் கார்டைகளை  பறித்து கொண்டு, அவரை அங்கிருந்து துரத்திவிட்டனர். இதுகுறித்து சுரேஷ் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிய 4 பெண்களை தேடி வருகின்றனர்.

Related Stories: