கழிவுநீர் கால்வாய் பணி துவக்கம்

கிருஷ்ணகிரி, ஜூன் 11: கிருஷ்ணகிரி நகராட்சியில், ₹2.90 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி நகராட்சி 23வது வார்டிற்கு உட்பட்ட பானக்கார தெருவில், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின் துவக்க நிகழ்ச்சி நடந்தது. நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமை வகித்து, பூமிபூஜை செய்து கால்வாய் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர் தேன்மொழி மாதேஷ், வட்ட பிரதிநிதி ராஜா, ஜெகநாதன், முனீர், ஜாவித்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: