வைகாசி பெருவிழா கூடலழகர் கோயிலில் கொடியேற்றம்

மதுரை: மதுரை கூடலழகர் கோயில் வைகாசி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக கோயில் கொடிமரம் அருகே பெருமாள், ஆண்டாள், தாயார் ஆகியோர் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு யாகபூஜைகள் நடந்ததை தொடர்ந்து, திருவிழாவுக்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோயில் தக்கார் ராமசாமி, உதவி ஆணையர் செல்வி மற்றும் கோயில் உயரதிகாரிகள், அலுவலர்கள், பக்தர்கள் திராளக கலந்து கொண்டனர்.வைகாசி பெருவிழா வரும் 18ம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் நேற்றிரவு பெருமாள் அன்னவாகனத்தில் எழுந்தருளி, தேரோடும் வீதிகளில் வலம் வந்தார். இதேபோல், திருவிழா நடைபெறும் நாளில், இன்று சிம்ம வாகனம், நாளை அனுமார் வாகனம், 8ம் தேதி கருடவாகனம், சேஷவாகனம், யானை வாகனம், பூச்சப்பரம், 13ம் தேதி தேரோட்டம், 15ம் தேதி தசாவதாரம் ஆகிய முக்கிய விழாக்கள் நடக்கிறது.

Related Stories: