அகரமாங்குடி முத்தாலம்மன் கோயில் பால்குட திருவிழா

பாபநாசம், ஜூன் 6: அகரமாங்குடி முத்தாலம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் பால் குடம், பால்காவடி எடுத்து அம்மனை வழிபட்டனர். அய்யம்பேட்டை அருகே அகரமாங்குடி கிராமம் மேலத்தெரு மற்றும் உச்சி மேட்டு தெருவில் அமைந்துள்ள  முத்தாலம்மன் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி 5ம் தேதி வெட்டாற்றங்கரையில் இருந்து பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், பால் காவடி திருவீதி வழியாக வந்து அம்மனை வழிபட்டனர். மாலை ஊர் பெண்கள் பொங்கல் வைத்தும் அம்மன் ஆற்றுக்கு புறப்படும் நிகழ்ச்சியும், இரவு வாண வேடிக்கை மற்றும் நாதஸ்வரம் மேளம் முழங்க அம்மன் வீதிஉலா காட்சியும், ஆடல் பாடல் பல்சுவை நிகழ்ச்சியும் நடந்தது. நாளை அம்மனுக்கு காப்பு நீக்குவதிலும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.

Related Stories: