புதுக்கோட்டை வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

புதுக்கோட்டை, மே.30:புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், , பால், தயிர் பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு வெள்ளிக்காப்பு சாற்றப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. . திருக்கல்யாணம் தொடர்ந்து மாலையில் புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து வரதராஜ பெருமாளுடன் பக்தர்கள் தேங்காய், பழங்கள், பூக்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட சீர்வரிசைகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக சாந்தநாதசுவாமி கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் வரதராஜ பெருமாள் தாரை வார்த்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள்,இறைவழிபாடுஅமைப்பினர் விழாக்குழுவினர்கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தில் பொதுமக்கள் திரளானோர் வருகை தந்து வழிபட்டனர்.

Related Stories: