குமரி அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் ஜூன் 30ம் தேதி வரை நடக்கிறது

நாகர்கோவில், மே 27:  கன்னியாகுமரி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையங்கள் ெசயல்பட்டு வருகிறது. நாகர்கோவில் தலைமை அஞ்சலகம், தக்கலை தலைமை அஞ்சலகம் மற்றும் குழித்துறை, மார்த்தாண்டம், நெய்யூர், கோட்டார், கருங்கல், சுசீந்திரம், கன்னியாகுமரி, திருவட்டார், களியக்காவிளை, குலசேகரம் உள்பட 40 அஞ்சலகங்களில் பொதுமக்கள் இந்த சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த அஞ்சலக ஆதார் சேவை மையங்களில் புதிதாக ஆதார் பதிவு செய்யும் சேவைக்கு கட்டணங்கள் எதுவும் இல்லை. பெயர், வீட்டு முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண் போன்ற திருத்தங்களுக்கு கட்டணம் ரூ.50 ஆகும். கைரேகை, கண் கருவிழி உள்ளிட்ட விவரங்களை திருத்தம் செய்ய கட்டணம் ரூ.100 ஆகும். இந்த மாதம் கடந்த 17ம் தேதி முதல் ‘ஆதார் தமாகா’ என்னும் சிறப்பு முகாம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சிறப்பு முகாம் வருகிற ஜூன் 30ம் தேதி வரை நடக்கிறது. நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மற்ற அஞ்சலகங்களில் வழக்கமான அலுவலக நேரத்திலும் ஆதார் சேவையைப்பெற முடியும். மேலும் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் விரைவு அஞ்சல் சேவையும் பொதுமக்கள் நலன் கருதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: