கும்பகோணம் அருகே ஆடுதுறையில் தஞ்சை வடக்கு மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம்

கும்பகோணம், மே 27: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் ஆடுதுறையில், தஞ்சை வடக்கு மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், நாம் தற்போது சவாலான சூழலில் உள்ளோம். இதனை கடந்து செல்வோம். இந்த நிலைகள் மாறும். மதிமுக கட்சியினர் மக்கள் பணியில் கவனம் செலுத்தி, நம்பிக்கையை ஏற்படுத்திட வேண்டும் என்றார். மேலும் மதிமுக சார்பில் ஆடுதுறை பகுதி மக்களுக்கு, இலவச அமரர் ஊர்தியும் வழங்கப்பட்டது. முன்னதாக, தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில், தமிழக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆடுதுறையில் அரசின் நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ளதால் இங்கு அரசு வேளாண் கல்லூரி ஒன்றை தொடங்க வேண்டும். மீத்தேன், ைஹட்ரோ‌கார்பன், சேல் கேஸ் போன்றவற்றுக்கு எதிராக போராடி உயிரிழந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு, தமிழக அரசு கும்பகோணத்தில் மணிமண்டபம் அமைத்து அவரை‌ பெருமைப்படுத்திட வேண்டும். கொரோனாவால் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் இயக்க ஒன்றிய ரயில்வே துறை முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: