விமான கழிவறையில் 3 தங்க கட்டிகள்: அதிகாரிகள் விசாரணை

சென்னை: மும்பையிலிருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று வந்தது. அந்த விமானம் மீண்டும் மும்பைக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். அதற்கு முன்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் லேபர்கள் விமானத்திற்குள் ஏறி விமானத்தை சுத்தப்படுத்தினர். அப்போது விமான கழிவறையை சுத்தம் செய்தபோது, கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் பார்சல் இருந்தது. இதையடுத்து, ஊழியர்கள், விமான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி அதிகாரிகள் அங்கு வந்து பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் 3 தங்க கட்டிகள் இருந்தன. அவற்றை மீட்டு சர்வதேச முனையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தங்கக்கட்டிகளை ஆய்வு செய்தனர். அதன்படி 3 தங்கக்கட்டிகளின் மொத்த எடை 350 கிராம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.16 லட்சம். விசாரணையில், இந்த விமானம் துபாயில் இருந்து மும்பைக்கு சர்வதேச விமானமாக நேற்று அதிகாலை வந்துள்ளது. அதன்பின்பு மும்பையிலிருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானமாக வந்துள்ளது. எனவே இந்த தங்கக்கட்டிகள் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்டவையாக இருக்கலாம் என தெரிகிறது.

Related Stories: